"தமிழகத்திற்கு தற்போதைக்கு தண்ணீர் திறக்க முடியாது" - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட ஒழுங்காற்று உத்தரவிட்டதை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு தினசரி ஒரு டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்படுவதை கர்நாடக உறுதி செய்யுறுமா ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்திருந்தது. இது குறித்து பெங்களூருவில் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.
பின்னர் பேட்டியளித்த அவர், வரும் ஜூலை 14ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி நீர் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறினார். காவிரிப் படுகையில் உள்ள 4 நீர்த்தேக்கங்களில் மொத்தம் 60 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளதால், விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டிய நிலை உள்ளதாக சித்தராமையா குறிப்பிட்டார்.
Comments